தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் 4 மணி அளவில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையானது சாத்தான்குளம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும், அதே போல் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழக வானிலை அறிவிப்பு மையம் அறிவித்ததன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.


