செய்துங்கநல்லூர் மதரஸாவில் கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மதரஸாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் மாநாடு நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஜூம்மாவிற்கு பிறகு ஊர் உருவான வரலாறு மற்றும் தியாகிகளின் வரலாறுகளை நினைவுபடுத்தும் விதமாக வரலாற்று கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ரையான் சேர்மன் ஜக்கரியா தொடங்கி வைத்தார்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.


