வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் 13-வது வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஆதிநாராயணர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி 4.00 மணிக்கு நடை திறப்பு கோபூஜை தொடர்ந்து மூலவர்-உற்சவருக்கு அபிஷேகம், மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை, காலசந்தி பூஜை, பூர்னாகுதி புரோட்சனம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 6 கருடவாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால் புதல்வர்கள் பி.ஆர்.சிவக்குமார், ஆர்.சரவணன ஏற்பாட்டின் பேரில் கோயில் மேலாளர் டி.வசந்தன் செய்திருந்தார்.


