விக்கிரமசிங்கபுரத்தில் கிராம உதயம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கிராம உதயம் இணைந்து எனது குப்பை எனது பொறுப்பு நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக மரக்கன்றுகள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல் விழா விக்கிரமசிங்கபுரம் புனிதமரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்விற்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் தலைமை வகித்தார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மன்ற துணைத்தலைவர் திலகா சிற்றரசன் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி மற்றும் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உரை ஆற்றினார். புனித மரியன்னை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி மற்றும் நகர்மன்ற 18 வது வார்டு உறுப்பினர் குட்டி கணேசன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கிராம உதயம் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பைகள் விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.


