ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் செய்துங்கநல்லூரில் உள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் நூலகத்திற்கு வந்திருந்தார். எழுத்தாளர் வாங்கிய விருதுகள், அவர் எழுதிய நூல்கள், அவரது மகன் அபிஷ்விக்னேஷ் இயக்கி ,சிஷ்யன் சுடலைமணி செல்வன் நடித்த புகையன் குறும்படம், எழுத்தாளரின் வாலிப வயதில் நடித்த நாடகங்கள் உள்பட அவர் சேர்த்து வைத்திருந்த நூல்களையும் வாங்கிய விருதுகளையும் கண்டு ரசித்தார். எழுத்தாளர் மகனும் ஆய்வு மாணவனுமாகிய அபிஷ்விக்னேஷ் பொன்னாடை போர்த்தி எழுத்தாளரின் 1000ம் பக்க நூலான தலைத்தாமிரபரணி நூலை பரிசளித்தார். சாத்தான்குளம் சங்கர், எம்.எல்.ஏ உதவியாளர்கள் சந்திர போஸ் , மளவை மரியராஜ், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கவுன்சிலர் சின்னத்துரை, காங்கிரஸ் கட்சி வட்டார புங்கன், நயினார், சித்தார்த், சித்திரை பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


