மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிராம உதயம் சுந்தரேசன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து தன்னார்வத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


