
21.02.2025குங்குமம் இதழில் பேராச்சி கண்ணன் எழுதிய கட்டுரை தான் இந்த தலைப்பைதாங்கி வந்திருந்தது.
இந்த கட்டுரை எழுத என்னிடம் தான் தொடர்ப்பு கொண்டார். நான் முனைவர் சுதாகர் அவர்களின் எண்ணை கொடுத்தேன்.
மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை ஆரம்பித்த பிறகு பல்வேறு கல்வெட்டுகளை கண்டுபிடித்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு சில கல்வெட்டுகளை எனக்காக கண்டு பிடித்து படித்தும் கொடுத்து இருக்கிறார்கள். எனவே தான் இந்த கட்டுரையை நான் குங்குமம் வார இதழுக்கு நன்றி சொல்லி என்னுடைய நூலில் இணைத்துக்கொண்டேன்.
திருநெல்வேலி என்றதும் முதலில் நெல்லையப்பர் கோயில்தான் அனைவரது நினைவுகளிலும் நிழலாடும். இதற்கடுத்து பிரசித்தி பெற்றது தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோயில்.
எப்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறதோ அப்பெதெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் இந்தக் குறுக்குத்துறை முருகன் கோயிலே முதன்மையாகக் காட்டப்படும். அந்தந்த வகையில் தமிழகத்திலுள்ள அனைருக்கும் பரிச்சயமான கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில்.
இந்த கோயில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. கோயிலின் தலவரலாற்றிலும் கூட 300 ஆண்டுகள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் இக்கோயில் 950 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிருபித்துள்ளனர் நெல்லை மனோன்மணியம பல்கலைக் கழகதொல்லியல் துறை பேராசிரி யர்களும், ஆய்வு மாணவி ஒருவரும்.
இது மட்டுமல்ல. இந்தக்கோயில் ஆயிரம் ஆண்டுகளாக எப்படி ஆற்றின் வெள்ளத்தைத் தாங்கி அசைக்க முடியததாக நிற்கிறது என்பதையும் நம் முன்னோர்களின் தொழில் நுட்பத் தையும் அவர்கள் கண்டறந்துள்ளனர்.
இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிர மணியத்திடம் பேசினோம். முதல்ல இந்த ஆய்வு எப்படி ஆர்பிச்சதுன்னு சொல்லிடுறேன் என ஆரம்பித்தார்.
நான் மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறை பேராசிரியராக பணியாற்றுகினேன்.
ஆரம்பத்துல மூலக் கூறு பைரலாலஜியில் பி.ஹெச்.டி முடிச்சிட்டு அமெரிக்காவில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு 2007ஆம் ஆண்டில இங்கு பேராசிரியராக பணியில் சேர்ந்தேன்.
எனக்கு தொல்லியல் மீதுஅதீத ஈடுபாடு உண்டு. பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் பயணிக்கிறப்ப தொல்லியல் இடங்களைப் பார்க்கிறதும், புரிஞ்சுக்க முயற்சி செய்றதுமாக இருந்தேன்.
இப்படி இருந்த சமயம், 2019 ஆம் ஆண்டு துணை வேந்தராக இருந்த பேராசிரியர் பிச்சுமணி, சென்டர் ஆப் ஆர்க்கியாலஜினு ஒரு தொல்லியல் மையத்திதை பல்கலைக் கழக வளாகத்தில் ஆரம்பிச்சார்.
காரணம், திருநெல்வேலி அருகே ஆதிச்சநலலூர், சிவகளையில் அகழாய்வுகள்பெரிய அளவில் நடத்திட்டு வருவதால் இந்த மையத் தொடங்கினார். நானு-ம் விடுமுறை நாட்களுல என்னுடைய ஊருக்குப் போகும் போது வழியில் உள்ள சிவகளைக்கும், ஆதிச்சநல்லூருக்கும் போயிட்டு போவேன்.
இதன்பிறகு முனைவர் என் . சந்திரசேகர் துணை வேந்தராக வந்ததும் அவர் இதை ஒரு துறையாக ஆரம்பிபோம்ன்னு 2023 ஆம் ஆண்டு எம்.ஏ கோர்சுடன் தொல்லியல் துறையைத் தொடங்கினார்.
இதுல நிறைய மாணவ மாணவிகள் சேர்ந்தாங்க. என் ஆர்வத்தால் இந்தத் துறைக்கும் என்னையே தலைவராக நியமிச்சாங்க. இதுல இரண்ட £மாண்டு படிக்கிற மாணவ மாணவிகள் ஆராய்ச்சி மேற் கொள்ளணும். அப்பத்தான் மீனா என்கிற மாணவிக்கு அவள் வசிக்கிற பகுதியிலேயே ஒரு ஆய்வு செய்யும் விதமாக குறுக்குத்துறை கோயிலை பண்ணும்படி அறிவுறுத்தினேன்.
குறுக்குத்துறை ஊரைச் சேர்ந்த என நண்பர் பேராசிரியர் நமசிவாயம் கணேஷ்பாண்டியன் ஜப்பான்ல இருக்கார். அவர்தான் முதல் முதலாக என்னை குறுக்குத்துறை கோயிலுக்கு அழைச்சிட்டு போனார். அவர் கோயிலுல யாகமும், தரிசனமும் செய்ய வந்தார். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.
அதனால் நான் கோயிலை சுத்திப் பார்த்தேன். ஐம்பது முறையாவது சுத்தியிருப்பேன். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. எப்படி ஆற்றுக்கு நடுவில் தாக்குப்பிடிச்சு இந்தக் கோயில் நிற்குதுன்னு ஒரு கேள்வி எழுந்தது. அப்ப அங்க 300 ஆண்டுகளுக்கு பழமையான கோயில்னு எழுதி வச்சிருந்தாங்க.
ஆனால எனக்கு இந்தக் கோயில் இன்னும் பழமையானதாக இருக்கும்னு மனசுல தோணுச்சு. அதனால் இதனை ஆய்வு பண்ணச் சொல்லி மாணவி மீனாவிடம் கொடுத்தேன்.
ஆரம்பத்துல அந்த மாணவிக்கும் இந்த ஆய்வு பிடிக்கல பெரிய கோயிலாக எடுத்துப் பண்ணணு முன்னு ஆசைப்பட்டாங்க.
ஆனா எனக்காக ஆய்வை மேற்க் கொண்டாங்க. பிறகு ஆய்வுல கிடைச்ச தகவல்களைப் பார்த்ததும் மாணவி மீனாவுக்கு அவ்வளவு ஆச்சரியம். இதனால் ரொம்ப ஆர்வமாகிட்டாங்க. ஆரம்பத்துல அந்தக் கோயில் முழுவதும் ஆய்வு பண்ணினா முந்நூறு நானூறு ஆண்டுக்கான கல்வெட்டுகள் தான் கிடைச்சது. வேறெதுவும் கிடைக்கலை.
அப்புறம் கடைசியாக வெளிப்பிரகாரத்தில் ஒரு கல்வெட்டு கிடைச்சது. மாணவி மீனாதான் அந்தக கல்வெட்டை கொண்டு வந்தாங்க. இங்குள்ள எங்கள் துறையின் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் அதை படிக்க உதவினாங்க.
பிறகு எல்லோரும் சேர்ந்து எத்தனை ஆண்டுகள் பழமையான துன்னு கல்வெட்டை படித்துப் பார்த்தோம். அப்போதுதான் 950 ஆண்டுகள் பழமையானதுன்னு தெரிஞ்சது. பிறகு , கோயிலுல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி செதுக்கின தூண்கள் இருப்பதையும் கண்டு பிடிச்சோம்.
அதனால் ஆயிரம் ஆண்டு கள் பழமையானது என்பதை உறுதிப் படுத்தினோம். எப்படி ஆயிரம் ஆண்டுகளாக தண்ணீருக்கு நடுவே இருக்குதுன்னு யோசிச்சோம். வேறு எதுவும் கல்வெட்டு கிடைக்குமான்னு கோயிலை சுத்தி சுத்தி வந்தோம்.
அப்போ தான் கருவறையில் உள்ள விமானம் முழுவதும் ஒரே கற்களால் ஆனதுன்னு தெரிஞ்சது.
( நதி வற்றாமல் ஓடும்)