“ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை”.
அனைத்து பத்திரிகைத் துறை நண்பர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தினம் நல் வாழ்த்துக்கள்
இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ல் தொடங்கப்பட்டு நவ. 16ல் செயல்படத் துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ.16ல் தேசிய பத்திரிகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்ப்பதில் பத்திரிகை முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்தின் கண்ணாடியாகப் பத்திரிகையாளர்கள் உள்ளனர். ஆபத்தான சூழல்களிலும் பணியாற்றி மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றனர். கொரோனா சூழலில் பத்திரிகையின் பணி அளப்பரியது.


