பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி வரலாற்று துறை பேரவை விழா வேதசிரோன் மணி கலையரங்கத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் கேப்டன் முனைவர் ஆண்டுரூஸ் தலைமை வகித்தார். கல்லூரி செயலளார் ஜெயசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் பர்னபாஸ் ஜேக்கப் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொருநை நதி நாகரீகம் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் ஸ்டேன்லி டேவிட் தொகுத்து வழங்கினார். முனைவர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று துறை பேராசிரியர்கள் ஜெபமணி மான்சிங், ஜெயசிங், முனைவர். ஸ்டெல்லா மற்றும் முனைவர். எட்வின் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்


