மாவட்ட பூப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
எட்டயாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளிகளில் அக்டோபர் மாதம் கடந்த 10ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தூத்துக்குடி மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட இறுதிப்போட்டிகளில் பெண்கள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் பிரிவில் உடன்குடி ஆர்விகே பள்ளியையும், 17 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவில் கோவில்பட்டி கம்மாவர் மேல்நிலைப்பள்ளியையும் 19 வயதுக்கு உட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவில் திருச்செந்தூர் காஞ்சி ஶ்ரீசங்கரா பள்ளியையும் வென்று ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்தனர்.
வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சியாளர் பாலசிங் ஆகியோருக்கு ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியைகள் சோபியா, சுஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். போட்டி ஏற்பாடுகளை எட்டயாபுரம் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் கண்ணன் மற்றும் பார்த்தீபன் தலைமையில் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


