உலகப் புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோவில் தசரா சூரசம்கார விழா நேற்று நள்ளிரவு பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில் அதிகாலை முதல் தற்போது வரை மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் திருக்கோவில் பணிகளுக்காக வந்திருக்கும் காவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.


