கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. குலுக்கல் முறையில் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்து கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாக்கிய லி லா செல்வி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


