திருச்செந்தூரில் பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கத்தின் சார்பில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான சிறப்புச் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை எதிரில் தெய்வா கல்யாண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்குச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மாநில கௌரவத் தலைவர் பால்கனகராஜ், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.ராஜா, மற்றும் மாநில இணைச் செயலாளர் கோ. லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டச் சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தகுந்த சட்ட ஆலோசனைகளை வழங்குவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் அருள், மாவட்டத் தலைவர் மாரியப்பன் மற்றும் மாவட்டச் செயலாளர் மா.சு. மனோகரன் உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


