தூத்துக்குடிக்கு முதலாவது பைப் லைன் திட்டம் தந்த குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாநகருக்கு முதலாவது குடிதண்ணீர் பைப் லைன் திட்டம் தனது சொந்த செலவில் கொண்டு வந்த கோமான், தூத்துக்குடி நகரதந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் பிரதான பஜாரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


