தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் சப்பர பேரணி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பாக அனைத்து அம்பாள்களின் அருள் சப்பர பேரணி, பாரதமாதா, பெண்களின் மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் சிவன் கோயில் சென்றடைந்து.
அதன்பின் சண்முகபுரம் பத்ரகாளியம்மன், உச்சினி மாகாளியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன், மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய திருக்கோவிலிலிருந்து அம்மன் பச்சை சாத்தி சிவன் கோயில் முன் வந்தடைந்து எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து முன்னணி சார்பில் மாயகூத்தன், தனபால், சிவக்குமார், வன்னிய ராஜன் ஆதிநாத ஆழ்வார், கனகராஜ், செல்லப்பா, ஜெய் கிருஷ்ணன், ராகவேந்திரா, சிவலிங்கம்,பலவேசம் சரவணகுமார், வினோத், சிபு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


