தூத்துக்குடியில் வடிகால் தூர்வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதியதாக பணிகள் நிறைவுற்ற வடிகால்களின் வழியாக செல்லும் மழை நீர் சேரும் முகத்துவாரங்கள் அமைத்துள்ள திரேஸ்புரம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியினையும், கருத்த பாலம் பகுதியில் உள்ள ஓடையினை தூர் வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேணி, வட்ட பிரதிநிதி மார்சல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


