கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225வது நினைவு நாளை முன்னிட்டு கயத்தாரில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி இன்று (16.10.2024) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் கயத்தாறு வட்டாட்சியர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


