செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டுக்கான திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக மாலை 7 மணி அளவில் கொடி பவனி நடந்தது. அதன்பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த கொடி கம்பத்தில் திருக்கொடி அர்ச்சிக்கப்பட்டு ஏற்பட்டது. கொடியேற்றம் தூத்துக்குடி ரீத்தம்மாள்புரம் பங்குத்தந்தை ஆரோக்கியம் தலைமையில் நடந்தது. திருவிழாவின் முக்கிய விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது.


