தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளையில் இரண்டாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து 6 மாத காலமாக இந்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அகழாய்வு பணிகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவகளையில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தை தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் பார்வையிட்டார். அவருக்கு சிவகளை தொல்லியல்கள இயக்குனர் பிரபாகர் தொல்லியல் அலுவலர் விக்டர்,பரத் மற்றும் குமரேசன் விளக்கி கூறினர்.
சிவகளையின் தொன்மை குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார். சிவகளை ஒரு முக்கியமான இயற்கை அழகு சூழ்ந்த தொல்லியல் நகரம் என்று கூறி சிவகளையை பாராட்டினார். அவருடன் திருவைகுண்டம் வனச்சரகர் கேசவன் சிவகளை இளங்கோ, பிள்ளைவிநாயகம்,நாராயணன், வள்ளிநாயகம் மற்றும் சிவகளை ஆசிரியர் மாணிக்கம் மதர் சமூக சேவை இயக்குனர் கென்னடி ஒருங்கினைப்பாளர் பானு ஆகியோர் கலந்து கொண்டனர். அவருடன் சிவகளை ஆசிரியர் மாணிக்கம் உள்பட அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.