சிவகளையில் மதர் சமுக சேவை நிறுவனமும், சிவகளை ஊராட்சியும், மாவட்ட வனத்துறையும் இனைந்து ஒருகோடி பனைமரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி சிவகளை ஒப்பிலியப்பன் சாஸ்தா திருக்கோயிலில் வைத்து நடந்தது. சிவகளை ஊராட்சி மன்றத்தலைவி பிரதிபா தலைமை வகித்தார். மதர் சமுக சேவை அமைப்பின் இயக்குனர் கென்னடி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிசேக் தோமர் கலந்து கொண்டு பனைமர விதைகளை வழங்கி பனைமரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 4% அளவில் மட்டுமே பசுமை காடுகள் உள்ளன. இது தமிழகத்தில் கடைசியில் இருந்து மூன்றாவது இடத்திலுள்ளது என்றார். இந்த ஒரு கோடி பனைமரங்கள் நடப்படுவதன் மூலம் பசுமை நிலையில் முன்னேற்றம் அடைந்து முதல் இடத்தை பெறலாம் என்றார்.
விவசாயசங்க தலைவர் மதிவானன், முன்னாள் வன அலுவலர் பிள்ளைவிநாயகம், முன்னாள் டி.ஆர்.ஓ. இளங்கோவன், முன்னாள் குடிநீர் வடிகால் பொறியாளர் நாராயணன், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சோழபெருமாள், பரும்பு வள்ளிநாயகம் ஒப்பிலி சாஸ்தா திருக்கோயில் நிர்வாகிகள் சுப்பையா மற்றும் வள்ளியம்மை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் கேசவன், மதர் சமுக சேவை அமைப்பின் இயக்குனர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தொகுத்து வழங்கினார். மதர் சமூக சேவை அமைப்பின் ஒருங்கினைப்பாளர் பானு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் கேசவன், வன அலுவலர், சிவகளை பஞ்சாயத்து செயலர் வெங்கடேஷ் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சுடலைமணி வேலம்மாள் ஆறுமுகம் பரும்பு பரமசிவன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


