செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழாவை பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆசிரியர்களும் ஊர் பொதுமக்களும் சுதந்திர போராட்ட தலைவர்களின் முகமூடிகளை அணிந்து அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து கொண்டாடினார்கள்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கருங்குளம் ஒன்றிய துணைத்தலைவர் லட்சுமண பெருமாள் அவர்கள் தமிழ்நாடு வான் அறிவியல் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி இளந்தேடி கல்வி மாவட்ட குழு உறுப்பினர் சம்பத் சாமுவேல் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள கொண்டார்கள் அறிவியல் ஆசிரியர் ராமசாமி நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கியது தலைமையாசிரியர் திரு முத்துக்குமார் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் லட்சுமண பெருமாள் ஒன்றிய துணைத் தலைவர் மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் அனைவரையும் சமமாக நடத்தப்பட வேண்டும் எந்த பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக வாழவும் சுதந்திர தின வாழ்த்து கூறினார் சென்று வருடம் நடைபெற்ற தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் தங்க நாணயங்களும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது. பள்ளிக்கு தவறாது 100% வருகை புரிந்தவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன பள்ளி கட்டிடத்திற்கு 15 வகுப்பறைகளுக்கு மின்விசிறி துணைத்தலைவர் லட்சுமணன் பெருமாள் வழங்கினார் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராமலிங்கம் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆசிரியை திருமதி கலா அவர்கள் நான்கு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
சிறப்பு விருந்தினர் அனைவரும் ஆசிரிய பெருமக்களால் கௌரவிக்கப்பட்டார்கள் சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர் முத்துக்குமார் அவர்களை தமிழ்நாடு வான் அறிவியல் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மற்றும் சம்பத் சாமுவேல் பொன்னாடையும் நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார்கள்இதை தொடர்ந்து மாணவ மாணவிகள் தேசத்துக்காக போராடிய தலைவர்களின் தியாகங்களை உணரும் வகையில் தங்கள் முகங்களில் அத்தலைவர்களின் முகமூடிகளை அணிந்து நினைவுகூர்ந்தார் கள். தொடர்ந்து மாணவிகள் நடனங்களும் மாணவர்களின்உரை வீச்சுகளும் நடைபெற்றன இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் பொன்முத்து நம்பிராஜன் நன்றி கூற தேசிய கீதம் பாடி நிகழ்வை நிறைவு செய்தோம் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி விடை பெற்றோம்


