பாளையங்கோட்டை தருவை பனங்காட்டில் சான்றோர்கள் கொண்டாடும் பனை தேசியத் திருவிழா நடந்தது. இரண்டு நாள் நடந்த திருவிழாவில் முதல் நாள் பனை சொந்தங்களுக்கு வரவேற்பு, பனை வணக்கம் நடந்தது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளூநர் டாக்டர் .கு. தமிழிசை சௌந்தரராஜன், குரு மகா சன்னிதானம் பால பிரஜாதிபதி அடிகளார் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சாக கலைக்குழு சாக மா. சங்கர், கலைச்செல்வி அச்சங்குன்றம் மாதவி வில்லுப்பாட்டு, ராமச்சந்திரன் பாண்டியன் தென்னாட்டு சிலம்பாட்ட கழகம் சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் உள்பட பல் வேறு கலைநிகழ்ச்சி நடந்தது.
இரண்டாம் நாள் நடந்த நிகழ்ச்சியில் குடி அழைப்புடன் பான காரம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சை மால், முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார் பட்டி நாராயணன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ்நாடார், திரைப்படஇயக்குனர் கே.எஸ் தங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஐ.கோ உள்படபலர் கருத்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தோகை வாழ்வரசி பாண்டியன், செ. குயிலி நாச்சியார், இரா. செல்வராமலிங்கம், அ. பார்வின், செ. அசோக்குமார், செ. வீரகுமார், டாப் டிவி ராஜா, வடிவேல் சுப்பிரமணியன், ரெஜிசிங் நாடார், அ.சசிகாந்த் சங்கரேஸ்வரன், கடற்கரை கார்த்திக், ஆ.டைகர் மூர்த்தி, சாமி ராஜ் குமரி ராஜா மற்றும் ஆரேக்குளம் பொதுநல சேவா சங்கம் செய்திருந்தது. நிகழ்ச்சி ஆலோசகர்களாக சேரன் அருள்நாடார், பொன்னுத்துரைஜோசப் ஆகியோர் செயல்பட்டனர். இரண்டு நாளும் பனை பொருள்கள், பனை உணவுத்திருவிழா நடந்தது.


