செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி மாணவமாணவிகளுக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அபு உபைக், முருகன், எம். செல்வி, அ.செல்வி, நாவஸ், சுப்பையா பாண்டியன், பொன்னையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


