தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறாம்பண்ணை ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று 75 வது சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. இதற்காக அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றத்தலைவர் சக் அப்துல் காதர் கொடியேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் அப்துல் கனி, வார்டு உறுப்பினர்கள் இப்ராஹிம், மகேஷ், சொஹரா, ஆறாம்பண்ணை மக்கள் நல சங்க நிர்வாகிகள், ஆறாம்பண்ணை இளைஞர் அணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். பற்றாளராக சங்கரி கலந்து கொண்டனர். ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ஹரிஹர சுந்தரம், மக்கள் நலப்பணியாளர் அருணாசலம், ஆறாம்பண்ணை மக்கள் நலச் சங்கத் தலைவர் சையது, ஆறாம்பண்ணை கிராம உதவியாளர் சரத்குமார், ஆறாம்பண்ணை கிராம செவிலியர் சதாசிவதம்மாள், ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஜான், மகளிர் சுய உதவிக் குழு வட்டார தலைவி கிரேசி, விவசாயத் துறை சார்பாக வட்டார வெங்கடேஷ், நியாயவிலைக் கடை ஊழியர் சீனி, அங்கன்வாடி பணியாளர் கோமதி, உதவியாளர் ரஹ்மத் நிஷா, முன்தாஜ், நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் ஜீவா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


