இந்தியா முழுவதும் இன்று 75வது சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சுதந்திரம் என்பது அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.
இதற்கான ஏராளமான நமது இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் இழந்து பெற்றது தான் இந்த சுதந்திரம். சுதந்திரத்திற்காக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை இழந்து இந்த சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர். அப்படி ஒருவர் தான் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரைச் சுதந்திர போராட்டதியாகி பெஞ்சமின். இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தனது உயிரை விட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி பெஞ்சமினை கௌரவிக்கும் விதமாக திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், துணை வட்டாச்சியர்கள் பாலசுந்தரம், சங்கரநாராயணன் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் திருச்செந்தூரில் அமலிநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பெஞ்சமினின் மனைவி பெட்லா பெஞ்சமிக்கு கதராடை அணிவித்து கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


