செய்துங்கநல்லூர் திரு நிழல் முத்துகிருஷ்ண தர்மபதியில் திருவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலையில் திரு நிழல் முத்துகிருஷ்ண தர்மபதியில் திருவிழா நடந்தது.
இதற்காக அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. 6 மணிக்கு உகப்பெருக்கும், 7 மணிக்கு பால்தர்மமும் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 11 பதம் மற்றும் சந்தனக்குடம் எடுத்து வரப்பட்டது. இந்த சந்தனகுடம் ஊர்வலம் செய்துங்கநல்லூர் பஜார் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது. மதியம் 10 மணிக்கு தவனப்பால் தர்மம், 11 மணிக்கு பணிவிடை, 12 மணிக்கு உச்சிப்படிப்பும் நடந்தது.
அதனை தொடர்ந்து மகா அன்னதர்மம் நடந்தது. மாலை 5 மணி அளவில் உகப்பெருக்கும், இரவு 8 மணிக்கு அய்யாவின் அருளிசைப்புலவர் ஸ்ரீகுருசிவ சிவசந்திரனின் அய்யாவின் அற்புதங்கள் நிகழும் ஆன்மிக அருளிசை வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு அய்யா தாலாட்டும், 10 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தென்னஞ்சோலை திருத்தாங்கள் பணிவிடையாளர்கள் செய்திருந்தனர்.


