தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாவட்ட அலுவலர் ஆர். கருணாகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பணியாளர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். அதன்பின் பொதுமக்களுக்கும், நிலையப் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில், தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி, நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமள அமிர்தா, விளாத்திகுளம் நிலைய அலுவலர் சங்கரன், பந்தல்குடி நிலைய அலுவலர்கள் கோட்டைமணி, ரமேஷ் மற்றும் நிலையப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


