கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், 200-க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சொர்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து சுதந்திர தின விழாவில், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்; நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றைத் தடுத்து, போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். என்று மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இவ்விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்து செல்வம் மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார், தாமோதரக் கண்ணன், பிரபாகரன், நடராஜன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சென்மதி, பூபதி, மகேஸ்வரி, பாண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவி நன்றி கூறினார்.


