தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது இந்திய சுதந்திர தின விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ‘டாக்டர் அருள்ஸ் டயபட்டீஸ் & லைஃப்ஸ்டைல் சென்டர்’ நிறுவனத்தின் ஆலோசனை மருத்துவரும் நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் ஆராத்யா கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கல்லூரி வளாகத்தில் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து சுதந்திர தினச் சிறப்புரையாற்றினார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.


