தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை கைம்பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட ஏழைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


