தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் காணப்படும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக 914 குழந்தைகள் கண்டறியப்பட்டது.
இதில், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 75 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு பேரிச்சம்பழம், புரத பொடி, நெய், இரும்பு சத்து சிரப் உள்ளிட்டவைகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


