முறப்பநாட்டில் பாஜக சார்பில் சுஷ்மா சுவராஜ் விருது வழங்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் முறப்பநாட்டில் சுஷ்மா சுவராஜ் விருது வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு பாஜக ஒன்றிய தலைவி சாந்தி தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவி கலையரசி முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும் மாநில பார்வையாளருமான லீலாவதி கலந்து கொண்டார்.
மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாவட்டச் செயலாளர் வக்கீல் செந்தில்பிரபு, மாவட்ட செயலாளர் அமுதா, மாவட்ட பொதுச் செயலாளர் மங்களரோஸ், மாவட்ட துணைத் தலைவி ஜெயலட்சுமி, மாவட்ட துணைத்தலைவி கிருஷ்ணவேணி, மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள், கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் நங்கமுத்து உள்பட கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த 10 பெண்களுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


