ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாறு மற்றும் ஆய்வுத்துறை தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் சிவகளை தொல்லியல் களத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் தொல்லியல் சார்ந்த கள ஆய்வுகள் பற்றியும் விளக்கினார். பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரிரியர் முத்தையா நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் முகைதீன் பாதுஷா, அப்துல் அஜீஸ், ஜெமிலி மெர்லின் ராணி, சாகுல் அமீது, ஆஷா, அப்துல்கலாம், செய்யதலி, சமீலி மற்றும் அப்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்ட தொல்பொருட்களை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து ஸ்ரீமூலக்கரை, சிவகளை தொல்லியல் களங்களை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து திருக்கோளூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வையும் அதில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களையும் பார்வையிட்டனர்.
திருக்கோளூரில் இந்திய தொல்லியல் அலுவலர் முனைவர் யத்தீஸ்குமார் மாணவர்களுக்கு அகழாய்வுகளை பற்றி விளக்கி கூறினார். கடைசியாக ஆய்வு குழுவினர் காயல்பட்டினம் சென்று அங்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டனர்.


