தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கடல் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலங்களைப் போல் மழைக்காலத்தில் நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக திரேஸ்புரம் பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தி மழைநீர் தடையில்லாமல் கடலுக்குள் செல்லும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேணி, வட்ட பிரதிநிதி மார்ஷல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


