தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவில் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிடா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா, மெடிண்டா டேனியல், ரெக்சிலின், ஜெயசீலி, பவானி,ஜெயா செல்வகுமார், மேயர் நேர்முக உதவியாளர்கள் ஜெஸ்பர், பிரபாகர், ரமேஷ், மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.


