தூத்துக்குடி அழகர் பப்பளிக் பள்ளியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி முத்தாலங்குறிச்சி காமராசு துவக்கி வைத்தார்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான சுதந்திர தினவிழா சிறப்பு கலைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் 11 பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்கள். சமகால நிகழ்வுகளை முறையாக ஆவணப்படுத்தி வரலாறுகளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிகளுக்கான தலைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. தொடக்க விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிறைவு விழாவில் செயிண்ட் மேரிஸ் கல்லூரி ஓய்வுப்பெற்ற விலங்கியல் துறைத் தலைவர் திலகா கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் பள்ளி தாளாளர் ப்ரியா கேசவன், அழகர் குழுமத்தின் சி.இ.ஓ தீரஜ் கேசவன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்தப்பட்ட போட்டிகளில் முதல் நிலைப் போட்டிகளில் வகுப்பு 1 முதல் வகுப்பு 5 வரை கொண்ட பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்று மில்லர் புரம் விகாசா பள்ளி பரிசினைப் பெற்றனர். இரண்டாம் நிலைப் போட்டிகளில் 6 வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அதிக புள்ளிகளைப் பெற்ற சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி பரிசினைப் பெற்றனர். மூன்றாம் நிலைப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் பள்ளி பரிசினைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி முதல்வர் தீபாஸ்ரீ சர்மா தலைமையில் ஆசிரியர்கள் , அலுவலர்கள் செய்திருந்தனர்.


