தமிழக பட்ஜெட்டில்
தொல்லியல் துறைக்கு 5 கோடி
தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு
வரவேற்பு
தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தொல்லியல் ஆர்வலர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.
தற்சமயம் தொல்லியல் துறைக்கு பொற்காலம் என்றே கருத வேண்டும். ஏனென்றால் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் தாமிரபரணி கரையில் உள்ள 37இடங்களை ஆய்வுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் நமது பகுதியில் கிடைக்கும் பொருள்களை இந்தியாவுக்குள்ளே அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசமயத்தில் இந்த ஆண்டு கொற்கை உள்பட கடல் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு செய்ய தமிழக அரசு 5 கோடிரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் சிவகளை உள்பட மூன்று இடங்கள் பாதுகாக்கப்படும் இடமாக அறிவித்துள்ளார்கள் . அதையும் வரவேற்கிறோம். இதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நிதி அமைச்சர் இதற்கான ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகப்பெரிய அருங்காட்சியகம் மாநில அரசு மூலமாக அமைத்து, சிவகளை, கொற்கையில் சைட் மியூசியம் அமைத்து. தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள் உள்பட பழமையான பொருள்களை சேகரித்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு அமைக்கும் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அருகில் மாநில அரசு அருங்காட்சியகம் அமையும் போது ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இவ்விடங்களில் பார்த்து செல்ல ஏதுவாக இருக்கும். இதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபடவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


