கொங்கராயகுறிச்சி
சிவன் கோயிலில் விளக்கு பூஜை
கொங்கராயகுறிச்சி சிவன் கோயிலில் கடைசி வெள்ளிகிழமையையட்டி விளக்கு பூஜை நடந்தது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. மதியம் சிவன் அம்பாள் பைரவருக்கு சிறப்புஅபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் உலகம் நலம் பெறவும், கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடவும், சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.


