
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள எஸ்.என். பட்டி வடகரையான் கோயில் கொடைவிழா நடந்தது. இந்த விழாவையட்டி குடியழைப்பு, அலங்கார பூஜை நடந்தது. இரவு சாமகொடைவிழா மிகச்சிறப்பாக நடந்தது. இந்த கொடைவிழாவில் செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தருக்கு விழா கமிட்டி சார்பில் பாராட்டுவிழா நடந்தது. இதில் அவருக்கு பாராட்டி நினைவு சின்னம் பரிசாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் இசக்கிபாண்டியன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்கதலைவர் குமார், சமூக சேவகர் சுடலை, ஏட்டு பாலசிங் உள்பட பலருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.என்.பட்டி வடகரையான் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.