
சாத்தான்குளம் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி முதலூரில் நடைபெற்றது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன் களப்பணியாளராக பணி செய்த மஸ்தூர் பணியாளர்கள்,மருத்துவமனை பணியாளர்கள்,கடைநிலை பணியாளர்கள் மற்றும் முதலூர் ஊராட்சி தூய்மை காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது.
முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு சாத்தான்குளம் வட்டாட்சியர் விமலா தலைமை வகித்து நிவாரண பொருட்களை வழங்கினார். ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர்கள் சிங்காரவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார் . நிவாரண பொருள்களாக 10 கிலோ அரிசி, பலசரக்கு பொருட்கள் கொண்ட தொகுப்பு பை தலா ரூ.500 பணமுடிப்பு பெண்களுக்கு சேலை ஆண்களுக்கு பேண்ட் சர்ட் மட்டும் வேஷ்டி சட்டை வழங்கப்பட்டது .
நிவாரண பொருட்கள் அனைத்தையும் முதலூரில் பணிபுரிந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் சிங்காரவேல் அவர்கள் தனது தகப்பனார் டாக்டர்.அழகுவேல் மற்றும் தாயார் முத்தாபரணம் அம்மாள் ஆகியோரின் நினைவாக வழங்கினார்கள் .