சாத்தான்குளம் அருகே கல்லூரிக்கு புத்தகம் வாங்கச் சென்ற மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை, சர்ச் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் சுபாஸ்ரீ (17) நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 11ம் கல்லூரிக்குச் சென்று புத்தகம் வாங்கச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் சுபாஸ்ரீ திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை வாசுதேவன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.