நாசரேத்தில் ரூ.28 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட செவிதிறன் குன்றியோர் பள்ளிக்கு மணவ, மாணவியர் தங்கும் புதிய விடுதி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில் இயங்கிவரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சுமார் 28 இலட்சம் ருபாய் செலவில் திறுமறையூரில் இயங்கி வரும் செவிதிறன் குன்றியோர் பள்ளிக்கு மணவ, மாணவியர் தங்கும் புதிய விடுதி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்நிகழ்ச்சியில் நாசரேத் பேராலய தலைமை குரு அன்ட்ரு விக்டர் ஞான ஒளி ஆரம்ப ஜெபம் செய்தார்.
வகுத்தாண்குப்ப சேகர குரு செல்வராஜ் வேதபாடம் வாசித்தார். பாலிடெக்னிக் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். திருண்டல லே செயலர் எஸ்டிகே ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். திருமண்டல கல்லூரிகளின் நிலைவரக்குழு செயலர்ஜெபச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிகே ஜெயசீலன் கல்வெட்டை திறந்து வைத்தார். பள்ளியின் தாளாளர் லில்லி பாக்கியவதி விருந்தினர்களை கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேராலய உதவி குரு ஜெபஸ்டின், செயற்குழு உறுப்பினர்கள் மாமல்லன், தினேஷ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்ட்ருஸ் ராக்லேண்ட், ஆர்ச்பால்டு ஜாண்சன், கண்ணப்பா, ஆட்சிமன்றக்குழு உறுபினர்கள் தனபால், ஜம்பு, ஜாஸ்பர், கேபா, சாமுவேல்ராஜ், லவ்சன், புனித லூக்கா செவிலியர் கல்லூரி தாளாளர் கமலி ஜெயசீலன், மர்காசிஸ் மேனிலைப் பள்ளி தாளாளர் சந்திரன், மர்காசிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் புஷ்பராஜ், கான்ட்ரக்டர் பட்டுராஜன், பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயகுமார், திருமண்டல ஆதரவு இல்லங்களின் மேலாளர் ஜெபகிருபை உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமையசிரியை ஜெசி கரோலின் நன்றி கூறினார்.


