சாத்தான்குளத்தில் செல்போனை எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் மினி லாரி ஓட்டுநரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் முதலூர் சாலை தெருவைச் சேர்ந்த மதியழகன் மகன் மகேந்திரன் (38). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவரிடம் திசையன்விளை லட்சுமிநகரை சேர்ந்த வடிவேல் மகன் சுபாஷ் (39) என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டில் இருந்த சுபாஷிடம், மகேந்திரன், செல்பேசியில் தொடர்பு கொண்டபோது அதனை சுபாஷ், எடுத்து பேசவில்லையாம்.
மறுநாள் வேலைக்கு வந்த சுபாஷிடம், மகேந்திரன் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரன், சுபாஷை அவதூறாக பேசிதாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர்அளித்த புகாரின்பேரில்சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் . அருள்சாம்ராஜ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


