சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பிற துறை நிறுவனங்களுடன் கலந்தாய்வு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நிர்வாகத்தின் சார்பில் வட்டார முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பிற துறை நிறுவனங்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர்கள், அனைத்து வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது தமிழக அரசின் திட்டத்தின் கீழ் சுயதொழில் வேலை வாய்ப்புகளுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.