சாத்தான்குளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்து பொக்கலைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சாத்தான்குளம் உதவி ஆய்வாளர். அருள்சாம்ராஜ் தலைமையில் போலீஸார் , தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள குளத்துகரை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட முயன்ற பொக்கலைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய வேம்படி முத்து மகன் சுடலைமணி (29) உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.


