சாத்தான்குளம், ஆக.15
சாத்தான்குளம்அருகே உள்ள தெற்கு ராமசாமிபுரம் அருள்மிகு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் மஞ்சள் தண்ணீர் கொண்ட குடத்தை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஸ்ரீபிரம்மசக்தி அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், சிறப்புரையாற்றினார். இதில் நெல்லை மண்டல இந்து முன்னணி செயலர் பெ. சக்திவேலன், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் லலிதா,செல்வலட்சுமி, வசந்தி, கோகிலா, முத்து லட்சுமி, இந்து அன்னையர் முன்னணி ஒன்றிய செயலர் ராமகனி, சிவன்குடியேற்று கிளை தலைவர் தமிழரசி, ஊர் பிரமுகர்கள் கோபால், அய்யாத்துரை, தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


