தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலமாக வட்டார முதலீட்டுத் திட்ட ஒப்புதல் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருங்குளம் வட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சிகளிலும் மக்களால் தயாரிக்கப்பட்ட கிராம முதலீட்டுத் திட்டம் வட்டார முதலீட்டுத் திட்டமாகத் தொகுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. வட்டாரத்தில் உள்ள பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரத்தொழில்கள், தனித்துவ மிக்க தொழில்கள் பற்றிக் கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில் செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி மேலாளர் ஜியோ பிரகாஷ், கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் ஜுடு அந்தோணி தாமஸ் , உதவி தோட்டக்கலைத்துறை முரளிதரன், வேளாண்மைத்துறை இயக்குநர் இசக்கியப்பன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டச் செயல் அலுவலர்கள் அணித்தலைவர்கள் கலந்துகொண்டனர்.


