1822 – சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1830 – அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது. 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.
1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.
1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
1888 – வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாயின.
1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1907 – நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
1926 – பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை செருமனி கைப்பற்றியது.
1940 – 728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
1941 – அனைத்து செருமனிய, இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.
1946 – மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.
1949 – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.
1959 – கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.
1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.
1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
2002 – புவியருகு விண்பொருள் “2002 எம்என்” 75,000 கிமீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றது.
2003 – விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2014 – உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.
2017 – இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.


