செய்துங்கநல்லூர் மின் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் சுரேஷ்குமார். இவர் செய்துங்கநல்லூரில் பணியாற்ற துவங்கியவுடனே பல நல்ல செயல்கள் நடந்தது. குறிப்பாக செய்துங்கநல்லூர் மின் அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகளை தீர்த்து நடைமுறைக்கு கொண்டு வந்தது. நிறைய இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தது. டிசம்பர் 2023 மழை வெள்ளத்தின் போது செய்துங்கநல்லூரை மின் துண்டிப்பு இல்லாத கிராமமாக பராமரித்தது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மிக வேகமாக மின்சாரம் வழங்கியது உள்பட நல்ல பணிகளை மிகச்சிறப்பாக செய்தார். கருங்குளம் அரசு ஆஸ்பத்திரி, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, செய்துங்கநல்லூர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தல், விவசாயிகளுக்கும் மின் வாரியத்துக்கும் சுமுக உறவை ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளை செவ்வன செய்தார். இவர் பணியாற்றிய இந்த காலம் செய்துங்கநல்லூருக்கு பொற்காலம். உங்களை எங்களால் மறக்க இயலாது. வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் பணி மாறுதல் செய்து புதுக்கோட்டை சென்று மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். எப்போதும் உங்களின் உதவி எங்கள் பகுதி மக்களுக்கு தேவை. தாங்கள் தாமிரபரணி நதி போல வற்றாமல் அனைவருக்கும் உதவ வேண்டும் எனவே நான் எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை நினைவு பரிசாக தருகிறேன்.- அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


