மழை வெள்ளத்தில் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை சீர் செய்யவேண்டும், சி சைட்டில் சைட் மியிசியம் அமைக்க வேண்டும், மக்கள் கொடுத்த நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காய் தொடர்ந்தோம். எங்களது மூத்த வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி இந்த வழக்கை வாதாடினார். அதற்கான தக்க நடவடிக்கையை எடுக்க மத்திய மாநில அரசுகளை உயர்நீதி மன்றம் ஆணை பிறபித்துள்ளது. இதற்கான செய்த வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு